இந்தவலையதளத்தில்உள்ள நல்லசெய்திகள்என்னைச்சார்ந்த பலநண்பர்களுக்குசென்றடையவேண்டும்என்றநோக்கத்தில்தான்உருவாக்கப்பட்டது.இதுவரை நான்பதிவிட்டபதிவுகளும்,இனி பதிவிடப்போகும்பதிவுகளும்எனது சொந்தபடைப்புகள்அல்ல. பலபதிவர்கள்எழுதிய நல்லபதிவுகளைத்தான்இங்குதொகுத்துள்ளேன்.

Monday, September 29, 2014

36 டப்பா உணவு, கொலைக்கருவிக்கு சமம்!!

Photo: நம்முடைய பாட்டன், பூட்டன் காலத்தில் இருந்து பயன்படுத்திய சிறுதானிய உணவுகளை மறந்து விட்டு கௌரவத்துக்காக பீட்சா, பர்கர், ஃபிரைடு ரைஸ் என துரித உணவுகள் மீது மோகம் கொண்டிருப்பதால், நீரிழிவு, ரத்தக்கொதிப்பு என பலவிதமான வியாதிகளின் பிடிகளில் சிக்கிக்கொண்டுள்ளோம்!!!!!!! 

நம்முடைய பாட்டன், பூட்டன் காலத்தில் இருந்து பயன்படுத்திய சிறுதானிய உணவுகளில்தான் ஒளிந்திருக்கிது.. கிராமங்கள் முதல் நகரங்கள் வரை இதன் மகத்துவத்தை உணர்ந்த பலர் சாமை, வரகு, கேழ்வரகு மாதிரியான தானியங்களை தேடிப்பிடித்து வாங்கி சமைத்து சாப்பிட்டு, ஆரோக்கியத்தை பாதுகாக்கத் துவங்கி இருக்கின்றனர். இதனை உணர்ந்துதான் தமிழக அரசு, தன்னுடைய பங்குக்கு சிறுதானியங்களை மக்களிடம் சேர்க்கும் விதமாக பாரம்பரிய உணவுத் திருவிழாவை நடத்த உத்தரவிட்டிருக்கிறது.
 
டப்பா உணவு, கொலைக்கருவிக்கு சமம்!!

நாம் சாப்பிடும் உணவுகளில் கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு, தாது உப்புகள், வைட்டமின்கள் போன்ற சத்துகள் அடங்கி இருக்க வேண்டும். இவைகள் அனைத்தும் சிறுதானியங்களில் அடங்கி இருக்கிறது. ஆகையால்தான், நம்முடைய முன்னோர்கள் சிறுதானிய உணவுகளை உண்டு ஆரோக்கியத்துடன் வாழ்ந்தார்கள். டப்பாவில் அடைத்து சாப்பிடும் உணவு, துப்பாக்கி போன்ற கொலை கருவிக்கு சமம். இன்றைக்கு 70 சதவிகித பெண்கள் உடல் எடை குறைவாக உள்ளனர். 50 சதவிகித குழந்தைகள் எடை குறைவாக பிறக்கின்றன. 70 சதவிகிதம் பேர் ரத்தசோகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறுதானியம் போன்ற சத்தான உணவு சாப்பிடாததே இதற்குக் காரணம்.
 
கௌரவத்துக்காக சாப்பிடாதீர்கள்.!!
 
80-ம் ஆண்டுகளில் 34 லட்சம் ஏக்கராக இருந்த சிறுதானிய சாகுபடி பரப்பு, தற்பொழுது 10 லட்சம் ஏக்கராக குறைந்துள்ளது. இதற்குக் காரணம் சிறுதானியம் தீண்டத்தகாத பொருளை போல பார்க்கப்பட்டதுதான். சமீப ஆண்டுகளாக அரிசி, கோதுமையில் தயாரித்த உணவுகளை மட்டும்தான் கௌவரவமாக நினைத்து... சோளம், கேழ்வரகு, கம்பு, சாமை, தினை மாதிரியான சிறுதானியங்கள் ஒதுக்கித் தள்ளியதால், கிராமங்களில் உள்ள விவசாயிகள்கூட சிறுதானியங்கள் மறந்துகொண்டிருக்கிறார்கள்.
 
பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதற்கும், பசியைத் தீர்ப்பதற்கும் சிறுதானிய உணவுகள் சிறந்தவையாக உள்ளன. உதாரணத்துக்கு கம்பு அரிசி மூலம் தயாராகும் கம்புகளி, கம்புசோறு, கம்புப்புட்டு, கம்பு பிஸ்கட் ஆகியவை உடல் வெப்பத்தை குறைத்து, வயிற்றுப்புண்ணை தடுக்க உதவுகிறது. ரத்தசோகை மற்றும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் சோளச்சோறு, சோளக்களி, சோள அடையில் இருக்கின்றது. ஆனால், இன்றைய தினம் பாரம்பரிய உணவுகளை தவிர்த்துவிட்டு, சத்துக்களுக்காக செயற்கை மாத்திரைகளை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். 

சிறுதானியம் என்றால் என்ன என்பதே மறக்கடிப்பட்டுக் கொண்டிருக்கும் சூழலில், இந்த விஷயத்தைக் கையில் எடுத்துள்ளது தமிழக அரசு. மக்களிடம் சிறுதானிய உணவுகளைக் கொண்டு சேர்க்கும் வகையில், மாநிலம் முழுக்க பாரம்பரிய உணவுத் திருவிழா களைகட்ட ஆரம்பித்துள்ளது.!!!!!

For More:https://www.facebook.com/Vivasayi

நம்முடைய பாட்டன், பூட்டன் காலத்தில் இருந்து பயன்படுத்திய சிறுதானிய உணவுகளை மறந்து விட்டு கௌரவத்துக்காக பீட்சா, பர்கர், ஃபிரைடு ரைஸ் என துரித உணவுகள் மீது மோகம் கொண்டிருப்பதால், நீரிழிவு, ரத்தக்கொதிப்பு என பலவிதமான வியாதிகளின் பிடிகளில் சிக்கிக்கொண்டுள்ளோம்!!!!!!!

நம்முடைய பாட்டன், பூட்டன் காலத்தில் இருந்து பயன்படுத்திய சிறுதானிய உணவுகளில்தான் ஒளிந்திருக்கிது.. கிராமங்கள் முதல் நகரங்கள் வரை இதன் மகத்துவத்தை உணர்ந்த பலர் சாமை, வரகு, கேழ்வரகு மாதிரியான தானியங்களை தேடிப்பிடித்து வாங்கி சமைத்து சாப்பிட்டு, ஆரோக்கியத்தை பாதுகாக்கத் துவங்கி இருக்கின்றனர். இதனை உணர்ந்துதான் தமிழக அரசு, தன்னுடைய பங்குக்கு சிறுதானியங்களை மக்களிடம் சேர்க்கும் விதமாக பாரம்பரிய உணவுத் திருவிழாவை நடத்த உத்தரவிட்டிருக்கிறது.

டப்பா உணவு, கொலைக்கருவிக்கு சமம்!!

நாம் சாப்பிடும் உணவுகளில் கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு, தாது உப்புகள், வைட்டமின்கள் போன்ற சத்துகள் அடங்கி இருக்க வேண்டும். இவைகள் அனைத்தும் சிறுதானியங்களில் அடங்கி இருக்கிறது. ஆகையால்தான், நம்முடைய முன்னோர்கள் சிறுதானிய உணவுகளை உண்டு ஆரோக்கியத்துடன் வாழ்ந்தார்கள். டப்பாவில் அடைத்து சாப்பிடும் உணவு, துப்பாக்கி போன்ற கொலை கருவிக்கு சமம். இன்றைக்கு 70 சதவிகித பெண்கள் உடல் எடை குறைவாக உள்ளனர். 50 சதவிகித குழந்தைகள் எடை குறைவாக பிறக்கின்றன. 70 சதவிகிதம் பேர் ரத்தசோகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறுதானியம் போன்ற சத்தான உணவு சாப்பிடாததே இதற்குக் காரணம்.

கௌரவத்துக்காக சாப்பிடாதீர்கள்.!!

80-ம் ஆண்டுகளில் 34 லட்சம் ஏக்கராக இருந்த சிறுதானிய சாகுபடி பரப்பு, தற்பொழுது 10 லட்சம் ஏக்கராக குறைந்துள்ளது. இதற்குக் காரணம் சிறுதானியம் தீண்டத்தகாத பொருளை போல பார்க்கப்பட்டதுதான். சமீப ஆண்டுகளாக அரிசி, கோதுமையில் தயாரித்த உணவுகளை மட்டும்தான் கௌவரவமாக நினைத்து... சோளம், கேழ்வரகு, கம்பு, சாமை, தினை மாதிரியான சிறுதானியங்கள் ஒதுக்கித் தள்ளியதால், கிராமங்களில் உள்ள விவசாயிகள்கூட சிறுதானியங்கள் மறந்துகொண்டிருக்கிறார்கள்.

பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதற்கும், பசியைத் தீர்ப்பதற்கும் சிறுதானிய உணவுகள் சிறந்தவையாக உள்ளன. உதாரணத்துக்கு கம்பு அரிசி மூலம் தயாராகும் கம்புகளி, கம்புசோறு, கம்புப்புட்டு, கம்பு பிஸ்கட் ஆகியவை உடல் வெப்பத்தை குறைத்து, வயிற்றுப்புண்ணை தடுக்க உதவுகிறது. ரத்தசோகை மற்றும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் சோளச்சோறு, சோளக்களி, சோள அடையில் இருக்கின்றது. ஆனால், இன்றைய தினம் பாரம்பரிய உணவுகளை தவிர்த்துவிட்டு, சத்துக்களுக்காக செயற்கை மாத்திரைகளை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம்.

சிறுதானியம் என்றால் என்ன என்பதே மறக்கடிப்பட்டுக் கொண்டிருக்கும் சூழலில், இந்த விஷயத்தைக் கையில் எடுத்துள்ளது தமிழக அரசு. மக்களிடம் சிறுதானிய உணவுகளைக் கொண்டு சேர்க்கும் வகையில், மாநிலம் முழுக்க பாரம்பரிய உணவுத் திருவிழா களைகட்ட ஆரம்பித்துள்ளது.!!!!!

The Farmer- உழவன்