இந்தவலையதளத்தில்உள்ள நல்லசெய்திகள்என்னைச்சார்ந்த பலநண்பர்களுக்குசென்றடையவேண்டும்என்றநோக்கத்தில்தான்உருவாக்கப்பட்டது.இதுவரை நான்பதிவிட்டபதிவுகளும்,இனி பதிவிடப்போகும்பதிவுகளும்எனது சொந்தபடைப்புகள்அல்ல. பலபதிவர்கள்எழுதிய நல்லபதிவுகளைத்தான்இங்குதொகுத்துள்ளேன்.
Showing posts with label உணவகங்கள். Show all posts

Thursday, May 15, 2014

16 டுபாக்கூர் வேலை ஹோட்டல்களில் - சென்னை பேச்சுலர் பாய்ஸ் ரொம்பக் கவனமா இருக்கணும்!

நம்ம தமிழ்நாட்டு ஹோட்டல்களில் எப்படி எல்லாம் டுபாக்கூர் வேலை நடக்குது என்று அந்தக் கடைக்காரர்களிடமே போட்டு வாங்கிய தகவல்கள்...

இட்லி: பொதுவா இட்லி மெத்துனு இருக்கணும்னா, ஒரு டம்ளர் இட்லி அரிசிக்கு கால் டம்ளர் உளுந்து தேவை. இரண்டையும் தனித்தனியா ஊறவெச்சு, தனித்தனியாதான் அரைக்கணும். அஞ்சு மணி நேரம் புளிக்கவெச்சு, சுட்டீங்கன்னா பஞ்சு மாதிரி இட்லி தயார். ஆனா, என்ன நடக்குது இங்க? கடை இட்லி அரிசி கால் பங்கு, ரேசன் அரிசி முக்கால் பங்கு, உளுந்து கால் பங்கு, ஜவ்வரிசி முக்கால் பங்கு, நைட்டு ஊறவெச்ச பழைய சாதம் கொஞ்சம், சோடா உப்பு எக்கச்சக்கமா... எல்லாத்தையும் அரைச்சு, மூணு மணி நேரம் வெயில்ல வெச்சுட்டு எடுத்து சுட்டால், கும்முன்னு குஷ்பு இட்லி தயார். அந்த இட்லியும் மீந்துருச்சின்னா, அப்பவும் பிரச்னை இல்லை. அடுத்த நாள் அரைக்கிற மாவுல மீந்துபோன இட்லியைப் போட்டு அரைச்சிடுவாங்க!

சோறு: தரமான சோறுன்னா, சோத்துப் பருக்கையை விரலில் வெச்சு மசிச்சா மை மாதிரி மசியணும். அப்பதான் அது வயித்துக்கு ஒண்ணும் செய்யாது. அப்படி இருந்தா கஸ்டமர்ஸ் நிறைய சாப்பிடுவாங்களே... அதுக்காகத்தான் பெரும்பாலான ஹோட்டல்ல முக்காப் பதத்துல சாதத்தை எடுத்துடுவாங்க. சாதம் பளிச்சுனு வெண்மையா இருக்கவும், லேட் ஆனாலும் காய்ஞ்சு போகாமல் இருக்கவும் சாதம் வேகும்போதே சுண்ணாம்புக் கல்லைத் துணியில் கட்டி சாதத்தில் போட்டுடுவாங்க. அன்லிமிட்டட்னு அகலமா போர்டுல எழுதி இருந்தாலும், இந்தச் சோற்றைக் குறிப்பிட்ட அளவுக்கு மேல நீங்க சாப்பிடவே முடியாது!
புரோட்டா: பல ரோட்டுக் கடை ஹோட்டல்கள்ல மைதா மாவோட சோடா உப்பு கலந்து, அதுல கழிவு டால்டாவை ஒரு பங்கு மாவுக்குக் கால் பங்கு டால்டா கணக்குல (ஹோட்டலுக்குன்னே விக்கிற மலிவு விலை டால்டா!) கலந்து அடிச்சு அரை மணி நேரத்துல புரோட்டா சுடுவாங்க. புரோட்டா சும்மா பூ கணக்கா பொலபொலன்னு உதிரும். ஆனா, அத்தனையும் போங்கு புரோட்டா!

சால்னா : சிக்கன் கடையில் பொதுவா நாம கொழுப்பு, ஈரல், குடல், தலை, தோல், இதெல்லாம் வாங்க மாட்டோம். அதேபோல மட்டன் கடையில குடலோட சேர்ந்து இருக்கிற ஒட்டுக்கொழுப்பு, ஒட்டுக்குடல் வாங்க மாட்டோம். இதை எல்லாம் தூக்கிப்போடாம ஓரமாக் குவிச்சுவெச்சிருப்பாங்க. பழக்கமான கடைக்காரரா இருந்தா விசாரிச்சுப் பாருங்க. 'ஹோட்டல்காரங்க மொத்தமா வாங்கிட்டுப் போயிடுவாங்க’னு அவரும் யதார்த்தமா சொல்லிடுவார். அரைக் கிலோ கறியோட இதை எல்லாத்தையும் ஒட்டு மொத்தமாப் போட்டு தூக்கலா கறி மசாலா, மிளகாய்த் தூள், கொத்தமல்லித்தூள், கொஞ்சம் மரத்தூள் அல்லது குதிரை சாணத்தூள் கலந்து, அஞ்சு ஸ்பூன் அஜினாமோட்டா கலந்து கொதிக்கவெச்சா அரை அண்டா நிறைய திக்கான சால்னா ரெடி!

ஒரு முக்கியமான எச்சரிக்கைங்க... தலையே போனாலும் சரி, (ரோட்டுக்)கடைகள்ல தலைக்கறி மட்டும் சாப்பிடாதீங்க. பொதுவாகவே செம்மறி ஆட்டோட தலையில புழுக்கள் இருக்கும். இது இயற்கையான விஷயம்தான். வீடுகளுக்கு வாங்குறப்ப பெரும்பாலும் வெள்ளாட்டுத் தலை தான் வாங்குவோம். செம்மறி ஆட்டுத் தலை வாங்கினாலும் கடைக்காரரு நம்ம கண்ணுல படாம தலையைக் கொதிக்கிற தண்ணில போட்டுட்டு, அப்புறம் அதை எடுத்து தரையில தட்டோ தட்டுன்னு தட்டி புழுவை எல்லாத்தையும் கொட்டிட்டுதான் மேலேயே எடுத்து வைப்பாங்க. அதை வீட்டுக்கு வாங்கிட்டுப்போய் நல்லா சுத்தம் பண்ணி சாப்பிடுவோம். ஆனா, மொத்தமா ஹோட்டலுக்கு விக்கிறப்ப எல்லாம் செம்மறி ஆட்டுத் தலையை இப்படி சுத்தம் பண்ண மாட்டாங்க. அப்படியே கைமாதான்.

எல்லாத்தையும்விட முக்கியம், ஹோட்டல்களுக்கு சப்ளை செய்யறதுக்குனே பஜாரில் மளிகைப் பொருட்கள் குறைஞ்ச விலைக்கு கிடைக்குது. எல்லாமே கலப் படம். பாலீஷ் செய்யப்பட்ட இலவச ரேசன் அரிசியோட பொன்னி அரிசி கலந்து விக்கிறாங்க. உடைஞ்ச கழிவுப் பருப்பு, கேசரிப் பருப்பைத் துவரம் பருப்புடன் கலக்கிறாங்க. மிளகாய்த் தூள், கொத்தமல்லித் தூள், டீத்தூளோட மரத் தூள், குதிரை சாணத்தையும் கலக் கிறது எல்லாம் சகஜமப்பா. நெய், எண்ணெய் வகைகளோட பன்றி, மாட்டுக் கொழுப்பு, வனஸ்பதி மற்றும் நாள்பட்ட கழிவு எண்ணெயையும் கலப்பாங்க.

சாதாரண ஹோட்டல் களிலும் கையேந்தி பவன் களிலேயுமே இப்படின்னா டாஸ்மாக் பார் பத்திச் சொல்லவே வேணாம். அதிலும் குறிப்பா, சென்னை பேச்சுலர் பாய்ஸ் ரொம்பக் கவனமா இருக் கணும்!

தகவல்: டி.எல்.சஞ்சீவ்குமார் @ விகடன் டைம்பாஸ்

06 சாலையோர உணவகங்கள் - எச்சரிக்கை ரிப்போர்ட்

Photo: சாலையோர உணவகங்கள் - எச்சரிக்கை ரிப்போர்ட்

இரண்டு வாரங்களுக்கு முன்னர் எனது நண்பர் தனக்கு அடிக்கடி சிறுநீர் ரத்தமாகப் போகிறது என்று சொல்லி மருத்துவரிடம் சென்றான். சிகிச்சை தரும்போது பிரச்சனை சரியாவதும், சில வாரங்களில் மீண்டும் அதே பிரச்சனையுடன் அவன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் செல்வதும் வாடிக்கையாகிவிட்டது. எத்தனையோ பரிசோதனைகள் செய்து பார்த்தும் காரணத்தைக் கண்டறிய முடியவில்லை. 

இறுதியில் அவனுடைய உணவுப்பழக்கத்தை பற்றித் தீவிரமாக விசாரித்தபோது தான், தினமும் மாலை நேரங்களில் வேலையைவிட்டு வீட்டிற்கு வரும்போது வழியில் உள்ள சாலையோர உணவுக்கடையில் ‘சில்லி சிக்கன்’ சாப்பிட்டு வருவது புரிந்தது.
இந்த உணவுப்பழக்கம் தான் அவருக்கு பிரச்சனையைத் தோற்றுவித்துள்ளது. எப்படியென்றால் ‘சில்லி சிக்கன்’ உணவிற்கு நிறத்தைக் கொடுப்பதற்காக ஒரு வேதிப்பொருளை பயன்படுத்துவார்கள். அந்த வேதிப்பொருளை பயன்படுத்துவார்கள். அந்த வேதிப்பொருள்தான் அவருடைய சிறுநீரகத்தைப் புண்ணாக்கி ரத்தம் கசிய வைத்தது என்று உறுதிசெய்யப்பட்டு, அந்த உணவு சாப்பிடுவதை நிறுத்திவிட்டார். இப்போது அவருக்கு ஏற்பட்ட பிரச்சனையும் தீர்ந்துவிட்டது.

பொதுவாக சாலையோரக் கடைகளில் உணவுகள் சாப்பிடுபவர்கள் ஏழைகள் தான். அவர்கள் தான் இத்தகைய உணவகங்களால் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். மலிவு விலை என்பதால் சாப்பிட்டுவிட்டு, பின்னர் மருத்துவமனைக்கு செலவு செய்ய வேண்டிய நிலைமைக்குச் சென்றுவிடுகிறது ஏழைகளின் வாழ்க்கை.
நீர் சுத்தமில்லாதது, சமைத்த உணவைச் சுத்தமாகப் பாதுகாக்காமல் வைப்பது, உணவில் கலப்படம் போன்றவற்றால் தொற்றுநோய்களின் ஆதிக்கம் இத்தகைய மக்களைப் பெரிதும் ஆட்டிப்படைக்கிறது. சுகாதாரமற்ற முறையில் அசுத்தமான தண்ணீரைப் பயன்படுத்தியே காபி, பால், தேநீர், வடை, பஜ்ஜி, போண்டா, இட்லி, பிரியாணி, புரோட்டா, இறைச்சி, மீன் இப்படி அனைத்து வகையான உணவுகளையும் விற்பனை செய்கிறார்கள். இத்தகைய கடைகளில் தண்ணீரை வைத்திருக்கும் பாத்திரங்களைப் பார்த்தீர்களானால் அழுக்கடைந்து போன பிளாஸ்டிக் குடங்களாகவும், சமைக்கவும், சாப்பிடவும் பயன்படுத்தப்படும் பாத்திரங்களும், தட்டுக்களும் சுத்தம் என்றால் என்ன என்று எதிர்கேள்வி கேட்கும்.
அதேபோல் தள்ளுவண்டியில் உணவு வியாபாரம் செய்பவர்கள், சமைத்த உணவை மூடி பாதுகாப்பாக வைப்பதில்லை. குறிப்பாக மீன், இறைச்சி போன்றவற்றைத் துண்டுகளாக்கி மசாலாவைத் தடவி, சிவப்பு நிறத்திற்காக வேதிப்பொருளை பூசி நுகர்வோரைக் கவர்வதற்காகத் திறந்த பாத்திரங்களில் அப்படியே பாதுகாப்பு இல்லாமல் வைத்திருப்பார்கள். இப்படி வைத்திருக்கும்போது சாலைகளில் இருந்து கிளம்பும் புழுதியும், வாகனங்களில் இருந்து வரும் கரும் புகையும் இந்த உணவுகளில் படிந்து விடுவதும் வாடிக்கைதான். 
இப்படிப்பட்ட சுகாதாரமில்லாத உணவுகளை உண்பதால் பாக்டீரியா முதல் ஏற்படும் டைபாய்டு, காலரா போன்ற நோய்க்கும், வைரஸ் கிருமிகளால் ஏற்படும் மஞ்சள் காமாலையும், அமீபா கிருமிகளால் வாந்திபேதியும், சீதபேதியும் ஏற்படும் அபாயம் அதிகம். இதைத்தவிர செரிமானக் கோளாறு, நெஞ்சில் எரிச்சல், வயிற்றில் உப்புசம், அல்சர் போன்றவையும் ஏற்படும். 
பல நேரங்களில் இத்தகைய கடைகளில் சமையல் செலவைக் குறைக்கும் நோக்குடன் தேங்காய் எண்ணெய்யுடன், பெண்களின் அழகு சாதனைப் பொருள்களைத் தயாரிக்கப்பயன்படும் அரிசித் தவிட்டிலிருந்து எடுக்கும் எண்ணெயையும் கலந்து சமைப்பதுடன், இறைச்சியை சீக்கிரமாக வேகவைப்பதற்காக காய்ச்சலுக்குத் தரப்படும் ‘பாராசிட்டமல்’ மாத்திரைகளைப் பயன்படுத்துவதும் நடக்கிறது. இந்தியாவில் இத்தகைய சுகாதாரமற்ற உணவுகளை உண்பதால் சிறுநீரகம் கெட்டுவிடுவதும், இரைப்பை, குடல், கணையப் புற்றுநோயும் ஏற்படும் வாய்ப்புக்கள் அதிகம் என்று உலகச் சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருக்கிறது. 
சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் கூட இத்தகைய உணவகங்கள் உள்ளன. ஆனால் அங்கு அவர்கள் கடைபிடிக்கும் சுத்தம் நமது வீட்டில் கூட அப்படி இருக்கமாட்டோம் என்று அங்கு நேரில் சென்று பார்த்தவர்கள் கூறியிருக்கிறார்கள். அவர்கள் சமைத்த உணவை எப்போதும் சூடாக வைத்திருப்பார்கள். உணவைக் கண்ணாடிப் பெட்டியில் வைத்து ஈக்கள் மொய்க்காதவாறு பாதுகாத்திருப்பார்கள். மினரல் வாட்டரைத்தான் பயன்படுத்துவார்கள். இத்தகைய சிறிய நாடுகளில் கூட இவ்வளவு சுகாதாரம் கடைபிடிக்க முடியும் போது நம்மால் முடியாதா? கண்டிப்பாக முடியும். சரியான திட்டமிடலும், தெளிவான சட்டங்களும், மக்கள் ஆரோக்கியத்தின் மேல் அரசுக்கு அதிக அக்கறையும், சமுதாயக் கடமையும், உடல் நலன் குறித்த விழிப்புணர்வும் இருந்தால் கண்டிப்பாக முடியும்.
இந்திய அரசின் சுகாதாரத்துறை முறைப்படி நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தொற்றுநோய் தடுப்புக்கு இப்போது செய்யும் செலவை விட இன்னும் பல நூறு கோடிகளை ஒதுக்க வேண்டிய அவசியம் ஏற்படும். சிந்திக்குமா அரசு?

நன்றி -Thannambikkai